தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் திரைப்படம் இன்று அமைதியாக வெளியாகி இருக்கின்றது. பொதுவாக தனுஷ் படங்களுக்கு இருக்கும் ப்ரோமோஷன் மற்றும் விளம்பரங்களை வைத்து பார்க்கையில் இப்படத்திற்கு சற்று குறைவாகவே விளம்பரங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வருகின்றது. படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிரபுவாக சாந்தமாக தன் மகளுக்கு ஆவி பிடித்து அவர் கஷ்டப்படும் போது இவர் தவிப்பது நமக்கும் பரிதாபம் வருகிறது.
மறுப்பக்கம் கதிர் கொடூர வில்லனாக மிரட்டுகிறார், அது தன்னை வம்பு இழுத்தவனை காலை மகன் முன் அமைதியாக கடந்து சென்று இரவு ஓட விட்டு கொல்வது திகில்.படத்தில் பெரிய கேரக்டர் என்று எதுவுமில்லை, தனுஷை நம்பியே செல்கிறது, தனுஷ் மகளாக நடித்தவர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
படத்தின் முதல் பாதி மிரட்டுகிறது, அதுவும் இடைவேளை காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது.இரண்டாம் பாதி கதையாக நகர்வதால் கொஞ்சம் திரைக்கதை மெதுவாக தான் செல்கிறது, முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை.
அதே நேரத்துல் வில்லன் தனுஷ் தன் அசுர நடிப்பால் இரண்டாம் பாதியை நகர்த்துகிறார். படத்தின் மிகப்பெரிய பலம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் பின்னணி இசை தான். மொத்தத்தில் இப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது