தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். நானே வருவேன் படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடிக்கிறார் தனுஷ். இந்நிலையில் இந்தப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இதனிடையில் ‘பொன்னியின் செல்வன்’ படம் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதால ‘நானே வருவேன்’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்றும் இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளி போகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாவது உறுதி என தெரிவித்திருக்கின்றார். இதனை கேட்ட தனுஷ் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த teaser வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.@dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @theedittable @saregamasouth pic.twitter.com/eknZsT9ZzS
— Kalaippuli S Thanu (@theVcreations) September 13, 2022