Skygain News

தனுஷின் நானே வருவேன் டீசர்..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!

தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இப்படத்தின் மூலம் செல்வராகவன், தனுஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். நானே வருவேன் படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடித்துள்ளார் தனுஷ். இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் தனுஷ் கலக்கியுள்ளதாக படத்தின் டீசரிலே தெரிகிறது.

செல்வராகவனின் தோற்றமும் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.தனுஷுடன் செல்வராகவன், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More