தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி வருகின்றார். மேலும் பன்முகத்திறன் கொண்ட நடிகராக விளங்கி வரும் தனுஷ் பல விருதுக்கும் சொந்தக்காரராக இருக்கின்றார். இருப்பினும் அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தன.
ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக தனுஷின் மார்க்கெட் சற்று ஆட்டம் காண ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தான் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்தது.
அனிருத்தின் இசையில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. மேலும் வசூலிலும் நூறு கோடியை நெருங்கியுள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இந்நிலையில் இப்படத்திற்காக தனுஷ் 15 கோடி சம்பளமாக வாங்கியதாகவும், இப்படத்தின் வெற்றியினால் தனுஷ் தன் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
அதாவது தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்காக தன் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளாராம். இதன் காரணமாக அப்படத்தின் தயாரிப்பாளர் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றார். எனவே சம்பள பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதால் தான் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.