தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணி என்று ரசிகர்கள் சிலரை அழைப்பார்கள். அவர்கள் இணைந்தால் படம் வெற்றியாகத்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வரும். அந்த வெற்றி கூட்டணி வரிசையில் மிகமுக்கியமானவர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன்.
பொல்லாதவன் படத்தின் மூலம் இணைந்த இவர்களது கூட்டணி ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிவாகை சூடியது. மேலும் ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷிற்கு கிடைத்தது. இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகின்றார். சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகின்றார்.
இதைத்தொடர்ந்து தற்போது விடுதலை படத்தில் தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது ,விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இளையராஜா இசையில் விடுதலை படத்திற்காக, தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் படத்தில் தனுஷ் நடிக்காமல் இருந்தது இருவரது ரசிகர்களிடமும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், தற்போது பாடல் மூலமாக அவர்களை கூல் செய்துள்ளது இந்தக் கூட்டணி.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகின்றது