Skygain News

உச்ச நட்சத்திரத்தின் படத்தின் வசூலையே முறியடித்த திருச்சிற்றம்பலம்..கெத்து காட்டும் தனுஷ்..!

கடந்த பல மாதங்களாக ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த தனுஷிற்கு சரியான நேரத்தில் கைகொடுத்துள்ளது திருச்சிற்றம்பலம். ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் என தொடர் தோல்விகளால் துவண்டிருந்தார் தனுஷ்.

எனவே கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தனுஷிற்கு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளது.

ஏழு வருடம் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். எனவே இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அஜித்தின் வலிமை பட சாதனையை தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் முறியடித்துள்ளதாம். கமலின் விக்ரம் மற்றும் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More