Skygain News

உலகம் முழுவதும் திருச்சிற்றம்பலம் செய்த வசூல்..மாஸ் காட்டும் தனுஷ்.!

தனுஷ் சமீபகாலமாக ஒரு ஹிட் படத்திற்காக போராடிக்கொண்டிருந்த நிலையில் தக்க சமயத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கைகொடுத்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் ஒரு சிறந்த பீல் குட் படமாக இருந்து அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தது. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், பாலிவுட்டில் கலாட்டா கல்யாணம், ஹாலிவுட்டில் தி கிரே மேன் என அடுத்தடுத்த படங்களும் ஓடிடியில் தான் வெளியானது.

இதனால் இரண்டு வருட காலங்களாக தனுஷை திரையில் காணாத ரசிகர்கள் ஏக்கத்தில் காத்திருந்தனர். அவர்களை குதூகலப்படுத்தும் விதமாக வெளியானது திருச்சிற்றம்பலம்.சமீபத்திய வெளியிடான கமலஹாசனின் விக்ரம் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படங்கள் இந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய தமிழ் படங்களாக உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று வெளியான திருச்சிற்றம்பலம் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகும்.

இந்த படம் செப்டம்பர் 5 வரை உலக அளவில் வசூல் செய்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷின் படம் 94.25 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும்,தனுஷின் ஹிந்தி பிளாக் பாஸ்டர் ரஞ்சனாவுக்கு பிறகு உலக அளவில் அவர் செய்த மிகப்பெரிய வசூல் இதுதான் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு விரைவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் படம் சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More