Skygain News

விஜய்யை முந்திய தனுஷ்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

சினிமா துறையில் எதுவும் நிலையில்லை என்பதை தனுஷ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். முன்னணி நடிகராக தனுஷின் சில படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்க அவரது மார்க்கெட்டும் ஆட்டம் கண்டது. மேலும் அவரின் சம்பளமும் குறைந்ததாக தகவல் வந்தது.

இந்த நிலையை தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் முற்றிலும் மாற்றியுள்ளது. தனுஷின் யாரடி நீ மோஹினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய அவரின் ஆஸ்தான இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

பல வருடம் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வசூல் சாதனை செய்துவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் பட வசூலை முந்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதுவரை திருச்சிற்றம்பலம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் 65 கோடி வசூலித்திருந்த நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அதனை முறியடித்துள்ளது. இந்த செய்தியால் தற்போது தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More