தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். என்னதான் பல வெற்றிப்படங்களை தனுஷ் கொடுத்து வந்தாலும் இடையில் சில காலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். அந்த சமயத்தில் தான் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது.
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் தனுஷை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. அதைத்தொடர்ந்து தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘நானே வருவேன்’ படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.இப்படம் ரச்கர்களின் அமோக வரவேற்பை பெற அடுத்ததாக தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
வெங்கி அட்லுரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில் ‘வாத்தி’ படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.