Skygain News

திடீரென வாத்தி ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்..இரட்டிப்பு சந்தோஷத்தில் ரசிகர்கள்..!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் அமோகமான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதற்கு முன்பு சில படங்களின் தோல்வியால் துவண்டிருந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

அதைத்தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தின் நடிகர் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார். இதனை தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.வாத்தி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் திருச்சிற்றம்பலம், இம்மாதம் நானே வருவேன், டிசம்பர் மாதம் வாத்தி என தனுஷின் படங்கள் அடுத்தடுத்து திரையில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More