தமிழ் சினிமாவால் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’ . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அண்மையில் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில், நடிகர் தனுஷ் டெலிவரி பாயாக வருவதால் இப்படத்தின் ட்ரைலரை நாடெங்கும் இருக்கும் டெலிவரி ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர் . மேலும் வரும் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண செம ஆர்வமுடன் உள்ளனர் .
