இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வை அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வந்தார். இந்நிலையில் சில நாட்களாக தோனி ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற போவதாக தகவல் வந்தது.
இதையடுத்து தற்போது தோனி கூறிய ஒரு வார்த்தை ரசிகர்களை உற்சாகமடைய சேட்டுள்ளது.சமீபத்தில் பிசிசிஐ பிசிசிஐ-ம் அட்டகாச அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பழைய முறைப்படி ஹோம் கிரவுண்டிலும் நடைபெறும் என அறிவித்தது.
அதாவது ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகள் சொந்த ஊர் மைதானத்திலும், 7 போட்டிகளை மற்ற ஊர் மைதானங்களிலும் விளையாடும். இதுதான் தோனிக்கு சூப்பர் வாய்ப்பாக அமைந்துள்ளது.இந்நிலையில் தனது ஒரே ஒரு வரியால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சென்னையில் சிஎஸ்கே அணியின் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்.எஸ்.தோனி, சேப்பாக்கம் மைதானத்திற்கு நாங்கள் மீண்டும் அடுத்த வருடம் வருகிறோம். அவர்கள் முன்னிலையில் கம்பேக் கொடுக்கிறோம் என்பது போன்று பேசியுள்ளார்.இந்நிலையில் இந்த வார்த்தையை கேட்டு தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது