இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் தற்போது ஐ.பி.எல் இல் CSK அணியை வழிநடத்தி வருகின்றார் தோனி. அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் தோனி CSK அணிக்காக ஆடுவார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
என்னதான் தோனி ஓய்வை அறிவித்தாலும் ரசிகர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் தோனி. கிரிக்கெட்டை தவிர்த்து தோனி பல வியாபாரங்கள் செய்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
மேலும் பல விளம்பர படங்களிலும் தோனி நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி தோனி ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.கடந்த சில மாதங்களாகவே இந்த தகவல் உலா வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழில் தோனி தயாரிக்கும் முதல் படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகின்றது.இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது