இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள தோனி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் தோனி. தோனியின் ராசியான நம்பர் 7 என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சென்னையில் தனது ப்ரடெக்ஷன் அலுவலகத்தை திறக்க தோனியின் டீம் மும்முரமாக வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனவே இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை