இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது ஐ.பி.எல் இல் CSK அணியை வழிநடத்தும் வீரருமான தோனி என்னதான் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயத்தில் நிலையான இடம் பிடித்துள்ளார் தோனி.இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான தோனி திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவர் தயாரிக்கவுள்ள தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்றும், அப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கப்போவதாக கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அவர் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இதனைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பித்தக்கது.