சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றார். ஆனால் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலியின் அறிவிப்பால் தோனி அடுத்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என்றே தெரிகின்றது. கங்குலி கூறியது, கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால், இன்று முதல், இந்திய கிரிக்கெட் பழைய முறைக்கு திரும்ப உள்ளது என்று குறிப்பிட்டார்.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து உள்நாட்டு போட்டிகளும், பழைய விதிகள் படி நாடு முழுவதும் உள்ள மைதானங்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதே போன்று அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளும் பழைய முறைப்படி 10 அணிகளும் சொந்த மண்ணில் ஒரு போட்டி, அந்நிய மண்ணில் ஒரு போட்டி என்ற வகையிலேயே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் தோனி 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தன் கடைசி ஆட்டத்தை சென்னையில் ஆட விரும்பிய தோனியின் ஆசை அடுத்தாண்டு நிறைவேறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது