Skygain News

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகரிக்கும் வைரக்கடத்தல்..!

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஸ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்த்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு தொடபாக கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண் துறை தொடர்பான அனைத்து கட்டிடங்களும் திறக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு தேவையான நவீன பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் என்பவர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதியான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தவறான செயல்கள் அங்கு நடைபெற்று வருவதாகவும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய வைரக்கல் மற்றும் சந்தன மரங்களை கடத்தும் முயற்சி நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார் மேலும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெப் கேமரா பதிவுகளை தேசியப் புலிகள் காப்பகத்திற்கு கொடுக்கும்போது அதில் பதிவு செய்யப்பட்ட பல காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் அழித்துவிட்டு கொடுப்பதால் அங்கு தவறான செயல்கள் நடைபெறுவது உறுதியாகிறது என குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் மர்மநபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார் மேலும் வனப்பகுதிக்குள் பதிவு செய்யக்கூடிய வெப் கேமரா காட்சிகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் ஒளிபரப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More