நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா தற்போது இந்தியில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார்.
30 வயதை கடந்த தமன்னாவின் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தக் கேள்விக்கு அவர் தன்னுடைய செயலால் பதிலளித்து வருகிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா டேட்டிங்கில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காதலர் தினத்தையொட்டி, விஜய் வர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இரண்டு கால்களும் இடையில் லவ் எமோஜியும் காணப்படுகிறது. இந்தப் போஸ்ட்டை அவர் வெளியிட்டவுடன் அந்த மற்றொரு கால்கள் தமன்னாவுடையது என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.