நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் ப.அருளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையோட்டி பெரம்பலூருக்கு வருகை தந்த சீமான் பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை 4 ரோடு அருகே நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தினை திறந்து வைத்தார் .
பின்னர் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் கட்சியின் கொடியேற்றியதோடு ,வேப்பூர் பேருந்து நிலையத்தில் 65 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் குன்னம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த மாவட்ட செயலாளர் ப.அருளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று மறைந்த அருளை பற்றியும் அவரின் கட்சி சார்ந்த செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
மின் கட்டண உயர்வு குறித்து முதல்வர் மௌனம் காப்பது ஏன் .?என்றும் தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது மின் கட்டண உயர்வு உடலை சாக்கடிக்கும் அளவிற்கு இருப்பதாக விமர்சனம் செய்துவிட்டு தற்போது மக்களின் கருத்தை கேட்டு மின்கட்டண உயர்வு ஏற்றிருப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றும் கவிப்பேரரசு வைரமுத்து அணிந்திருக்கும் உடைக்குறித்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா செய்த விமர்சனத்திற்கு பதில் அளித்தார் .
தாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறினார். மேலும் ராஜீவ் காந்தி தற்போது மேற்கொண்டு வரும் நடை பயணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு நடப்பதால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் என்று பதில் அளித்தார் .
மேலும் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விகளுக்கு “எங்களை ஏற்பவர்கள் எங்கள் பக்கம் வருவார்கள் நாங்கள் யார் பக்கமும் இல்லை..எங்களை ஏற்பவர்களை நாங்கள் ஏற்போம்” என்று பதிலளித்தார்.