தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் , இளம் வீரர் ஒருவர் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்த விராட் கோலி ஆக மாறலாம் என்று கூறியுள்ளார்.இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் , தனக்கு கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக ரன் சேர்த்து வருகிறார். நடப்பாண்டில் மட்டும் அவர் 700 ரன்களை அடித்திருக்கிறார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கையை நீங்கள் பேட்டிங்கில் பார்க்கலாம்.ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் எப்போதுமே நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்ம் ஏனெனில் ஒரு நாள் கிரிக்கெட்டில் நீங்கள் தொடக்கத்தில் சில பந்துகளை வீணடித்து விட்டு பிறகு அதனை சரிகட்டும் விதமாக ரன் சேர்க்கலாம்.ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பிரமாதமாக விளையாடி வருகிறார்.
ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் ஷாட் பாலை வீசி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தற்போது இந்த ஷாட்பாலை அவர் எதிர்கொள்ளும் யுத்தியை கற்றுக் கொண்டார் என நினைக்கிறேன்.ஆனால் நீங்கள் ஒரு பெரிய வீரராக பெயர எடுக்க வேண்டும் என்றால் விராட் கோலி போல் மாற வேண்டும் என்றால் முக்கியமான ஆட்டத்தில் நீங்கள் 120 ,130 ரன்கள் அடிக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய அணி சேஸிங் செய்யும் போது நீங்கள் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நிற்க வேண்டும்.அப்படி செய்தால் நீங்கள் விராட் கோலியை போல ஒரு சிறந்த வீரராக மாறலாம் என்றார் கார்த்திக்.