டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் முதுகுவலி காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பாதியில் வெளியேறினார்.இதைத்தொடர்ந்து ரிஷப் பந்த் மாற்றாக களத்திற்குள் வந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக்கை பெவிலியனில் கூட பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் காயம் குறித்து, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பதிலளித்துள்ளார். அதில், ‘‘போட்டி முடிந்தப் பிறகு நான் தினேஷ் கார்த்திக்கை பார்க்கவில்லை. ஹோட்டலில்தான் பார்த்து பேச வேண்டும்.

தினேஷ் கார்த்திக்கிற்கு முதுகு பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது’’ எனக் கூறினார்.எனவே தினேஷ் கார்த்திக் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது