8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் படத்தின் இயக்குனரான ஸ்ரீ கணேஷ் பிரபல நடிகையை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குருதி ஆட்டம்’, 8 தோட்டாக்கள் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ். இவர் பிரபல நடிகையை நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்தார் ஸ்ரீ கனேஷ் . வெற்றி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த மாத வெளியான ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கினார் ஸ்ரீகணேஷ். அதரவா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப்படம் மதுரையை அடிப்படையாக கொண்டு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சுகாசினி சஞ்சீவ் உதயநிதி நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வனம், சர்பத், சீதக்காதி, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
#8Thottakal & #KuruthiAattam Fame Director #SriGanesh Married to His Long Time Girlfriend #Suhasini (Model)♥️
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 7, 2022
Thaali kattum Podhu Antha Siripu😅 pic.twitter.com/HVJ3ZuZSQ6