Skygain News

தயவுசெய்து மன்னித்து விடுங்கள்..மன்னிப்பு கேட்ட கோப்ரா பட இயக்குனர்..!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

விக்ரமின் உழைப்பை இயக்குனர் வீணடித்து விட்டதாக ரசிகர்கள் விளாசினார்கள். மேலும் 3 மணி நேரம் 3 நிமிடம் ஓடும் இந்தப்படத்தின் நீளம் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய குறையாக பேசப்பட்டது.இதனையடுத்து படத்தின் நீளத்தில் 20 நிமிடங்களை படக்குழுவினர் குறைத்தனர். இந்நிலையில் படம் குறித்த ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் அஜய் ஞானமுத்து.

அப்போது, திரைக்கதை குழப்பமாக இருப்பதாக ரசிகர் ஒருவர் கமெண்ட் அடித்த போது, உங்களுக்கு திரைக்கதை குழப்பமாக இருந்ததற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள். இன்னொரு முறை ‘கோப்ரா’ படம் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர்தான் ‘கோப்ரா’ படத்தை இய்க்கினாரா என்பதை நம்ப முடியவில்லை என்ற ரசிகரின் கருத்துக்கு, ‘நீங்கள் ஏமாற்றமடைந்ததற்கு மன்னித்து கொள்ளுங்கள். அடுத்த முறை உங்களை திருப்திப்படுத்துவேன். நீங்கள்ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மீண்டும் முயற்சித்துப்பாருங்கள்’ என்று பதிலளித்துள்ளார்.தற்போது ரசிகர்களுக்கு இவர் அளித்துள்ள பதில் சமூகத்தளங்களில் செம வைரலானது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More