ராஜா ராணி என்ற வெற்றி படத்தின் மூலம் இயக்குனரானார் அட்லீ.தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி,மெர்சல் ,பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் அட்லீ.இந்நிலையில் அட்லீ என்னதான் வெற்றிகரமான இயக்குனராக இருந்தாலும் அவர் இயக்கும் படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றன.
அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படமும் அண்மையில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன்படி விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையை திருடி தான் அட்லீ ஜவான் படத்தை எடுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய தயாரிப்பாளர் சங்கம் அட்லீயின் ஜவான் படத்தின் கதையும், பேரரசு படத்தின் கதையும் ஒன்றல்ல என்பதை உறுத் செய்தது. இதன்மூலம் அட்லீ மீதான கதை திருட்டு புகார் பொய் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அட்லீ. ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது