தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என எல்லோராலும் போற்றப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. மண்மணம் மாறாத பல படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ள பாரதிராஜா தற்போது நடிகராகவும் கலக்கிவருகின்றார். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் பாரதிராஜா.
இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்துவரும் நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பாரதிராஜா. அவருக்கு தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாகவும் ஆல்டர்ட் சென்சோரியம் பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ளதாகவும் இதையடுத்து இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து இன்னும் சில வாரங்களில் பாரதிராஜா படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்ப்படுகின்றது
Film director and actor Bharathiraja has been discharged from the hospital. He was earlier admitted with complaints of altered sensorium.@Sinduj11 #Bharathiraja pic.twitter.com/a5wwhItfG1
— TNIE Tamil Nadu (@xpresstn) September 9, 2022