Skygain News

விக்ரம் படத்தில் அந்த ரோலை மிஸ் செய்த கௌதம் மேனன்..அவரே சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் தற்போது பரபரப்பாக பல படங்களில் நடித்து வரும் நடிகருமாக வலம் வருகின்றார் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குனரான கௌதம் மேனன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். காதல் படங்களாக இருக்கட்டும், அதிரடி திரில்லர் படங்களாக இருக்கட்டும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார் கௌதம் மேனன்.

இந்நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியுள்ளார் கௌதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கௌதம் மேனன் தனக்கு கமலின் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், அந்த சமயத்தில் சில காரணங்களால் அப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் செம்பன் வினோத் நடித்த ரோலில் முதலில் கௌதம் மேனனை தான் நடிக்க கேட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் அப்போது கௌதம் மேனன் சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More