Skygain News

எனக்கு சாதி வெறியா ? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதம் மேனன்..!

மின்னலே படத்தின் மூலம் இயக்குனரான கௌதம் மேனன் இன்று ஒரு நடிகராகவும் பிரபலமாக வலம் வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்தார்.இதைத்தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய கெளதம் மேனன், மற்ற இயக்குனர்களுக்கு எப்படின்னு தெரியல. ஆனா எனக்கு உண்மையிலே இறங்கி ஏதாவது செய்யலாமான்னு இருக்கு என ப்ளு சட்டை மாறனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கெளதம் மேனன் இவ்வாறு வெளிப்படையாக பேசியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.அதே சமயம் அவரின் பேச்சுக்கு எதிரப்பும் கிளம்பியது. இதனைடுத்து மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனன் குறித்து பல பதிவுகளை பகிர்ந்திருந்தார். குறிப்பாக ‘மின்னலே’ படத்தில் கெளதமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதன் பிறகு தனது பெயருடன் சாதி பெயரை சேர்த்து கெளதம் மேனன் ஆனார் என விமர்சித்திருந்தார்.இந்நிலையில் தனது பெயர் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள கெளதம் மேனன், “பிறக்கும் போதே எனக்கு வைத்த பெயர் கெளதம் வாசுதேவ் மேனன்தான். அது தான் எனது சான்றிதழ்களில் ஆதார் கார்டு போன்றவற்றிலும் உள்ளது.

‘மின்னலே’ படத்தின்போது டைட்டிலில் எனது முழுப் பெயரை பதிவு செய்ய தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர்தான் ஷங்கர் போல் பெயரை சுருக்கமாக வைத்துக்கொள்ள சொன்னார்.பச்சைக்கிளி முத்துச்சரம் படம் வரை இந்த நிலை ஒவ்வொரு தயாரிப்பாளரும் மூலமாக தொடர்ந்தது.

ஆனால், ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் என்னிடம் இருந்தது. மேலும் அந்தப் படம் எனது தந்தையை குறித்த காட்சிகள் உள்ள ஸ்பெஷலான படம் என்பதால் அதில் இருந்து ‘கெளதம் வாசுதேவ் மேனன்’ என எனது முழுப்பெயரை போட்டுக்கொண்டேன். மற்றபடி, வெளியில் சொல்வது போல் எனக்கு சாதி வெறி போன்ற கேவலமான எண்ணங்கள் கிடையாது என்று தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.