மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன்’ படத்தில் வைரமுத்து இல்லாதது ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.
மணிரத்னம், வைரமுத்து இடையே என்ன பிரச்சனை. பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி, இந்தப்படத்தில் இணையாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக பதிலளித்துள்ள மணிரத்னம், ரோஜா படத்தில் இருந்து அவர் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்தார்.

எங்களின் கூட்டணியில் பெரிய ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் தமிழில் வைரமுத்துவைபோல் பல கவிஞர்கள் உள்ளனர். அவரை விட திறமையாளர்களும் உள்ளனர். புதிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால் இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.