மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுந்தர் சி, மாரி செல்வராஜ், மிஷ்கின், எம்.ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் மிஷ்கின் பேசுகையில், உதயநிதி தனது டைரக்ஷனில் தான் முதலில் அறிமுகமாவதாக இருந்ததாகவும், இதற்காக அவரை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து யுத்தம் செய் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த சமயத்தில் தான் ராஜேஷ் மாதிரியான குட்டிச்சுவராய் போன டைரக்டரின் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என பேசி இருந்தார்.
உதயநிதியில் ஒருகல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கிய ராஜேஷ் மேடையில் இருக்கும்போதே மிஷ்கின் இவ்வாறு அநாகரிகமாக பேசியது பலருக்கும் முகசுளிப்பை ஏற்படுத்தியது.அவரின் இந்த பேச்சை ராஜேஷ் பெரிதுபடுத்தாவிட்டாலும், அவரது உதவி இயக்குனர்கள் மிஷ்கினுக்கு எதிராக இயக்குனர்கள் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்களாம்.

அந்த புகாரில் மிஷ்கின் இவ்வாறு பேசியதற்காக இயக்குனர் எம்.ராஜேஷிடம் நேரில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்