‘கோமாளி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படமாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. அண்மையில் இந்தப்படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டு அங்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், “லவ் டுடே என்ற தலைப்பை உருவாக்கிய முதல் நபருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள்.
In the process of using the title 'LoveToday' , I forgot to Thank the person who first created it .It's LoveToday(1997) fame Director Balasekaran . You have created a timeless title . Thankyou for the title sir and being generous about it .
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 30, 2022
தலைப்பிற்கு நன்றி சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் டைட்டிலை தான் பிரதீப் ரங்கநாதன் தனது படத்திற்கு பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.