பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீத்தில் ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
அதற்கு காரணம் என்னவென்றால் பிரதீப் ரங்கநாதன் கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் போட்ட ஃபேஸ் புக் பதிவுகளை ரசிகர்கள் தேடி எடுத்துள்ளனர். அதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், தோனி, நெஹ்ரா உள்ளிட்டோரை கெட்ட வார்த்தைகளில் மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

குறிப்பாக சச்சின் மாதிரி ஒரு சுயநலவாதி **** இல்லை என கூறியிருந்தார். தோனி எந்த பந்தையும் அடிக்காமல், விளையாடவே தெரியாது என்பது போல மோசமாக விமர்சித்துள்ளார். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்