Skygain News

முன்னணி நடிகர்களின் படங்களையே மிஞ்சும் வசூல்..கெத்து காட்டும் பிரதீப்..!

கோமாளி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படமாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இப்படத்தின் மூலம் அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் படத்திற்கான தியேட்டரும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆவதையும் குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.தமிழ்நாட்டிற்கு வெளியில் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேசியா). நான் நட்சத்திரம் இல்லை உங்களில் ஒருவன்.

நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார் பிரதீப்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More