தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய்.இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தற்போது உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்யின் வெற்றிக்கு அடித்தளமிட்டவரும் அவரின் தந்தையான இவரே. தற்போது தனது தந்தை மீதுள்ள கோபத்தால் அவருடன் பேசாமல் இருக்கிறார் விஜய்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தற்போது யார் இந்த எஸ்ஏசி என்ற பெயரில் யூடிப் சேனல் ஒன்றை துவக்கி தனது திரையுலக பயணம் குறித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இமயமலை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்து மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம தளபதி அப்பாவா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
#Himalayas pic.twitter.com/tSay0qk3w5
— S A Chandrasekhar (@Dir_SAC) November 1, 2022
மேலும் சிலர் அஜித் வழியில் பைக் ட்ரிப் கிளம்பியாச்சா என கிண்டலுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். எஸ்.ஏ.சி. தற்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.