தில் ராஜ் தயாரிப்பில் ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ஆர்சி 15. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் – இந்தியா படமாக இந்த படம் உருவாகி வருகிறது. தில் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 50 படம் இது என்பதால், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்குகின்றனர்.
இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
ஆர்சி15′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
தமன் இசையமைக்கிறார். ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக கியாரா அத்வானியும், மற்றொரு நாயகியாக அஞ்சலியும் நடிப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நியூஸிலாந்தில் ‘ஆர்சி 15’ படத்திற்காக ரூ.15 கோடி செலவில் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.
Team #RC15 #SVC50 wraps up a song shoot in New Zealand.
— Sri Venkateswara Creations (@SVC_official) November 30, 2022
Mega powerstar @AlwaysRamCharan shares pictures from the sets and appreciates the efforts of the entire team…@shankarshanmugh @SVC_official @DOP_Tirru @MusicThaman @advani_kiara pic.twitter.com/9Rui7qsD41
நியூசிலாந்தின் இயற்க்கை அழகை பிரம்மாண்டமான முறையில் ஷங்கர் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு பாடலுக்காக ரூ.15 கோடி வரை ஷங்கர் செலவு செய்துள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.