Skygain News

உலகநாயகன் பிறந்தநாள் ஸ்பெஷல்..ரசிகர்களுக்கு ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.எனவே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவரை வாழ்த்தி வருகின்றனர்.சமீபத்தில் அவரது நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படங்கள் வெளியாகாத நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. அதையடுத்து அவர் தற்போது இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

இந்நிலையில் தற்போது கமல் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார் .இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதைத்தொடர்ந்து இன்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் இயக்குனரான ஷங்கர் ஒரு புதிய போஸ்டருடன் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கமலை இந்திய சினிமாவின் பொக்கிஷம் என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More