தமிழ் சினிமா வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நபர் என்றால் அது ப்ளூ சட்டை மாறன் தான். ஒவ்வொரு படங்களுக்கும் இவர் அளித்து வரும் விமர்சனங்கள் கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகின்றன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் மாறன் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் மாறன் பேசும் சொற்கள் தான் அடுத்தவர்களை காயப்படுத்துவதாக இருக்கின்றது என பலரது கருத்தாக உள்ளது.நாகரிகமற்ற பேச்சு, உருவ கேலி என மாறன் செய்வது கடுமையான கண்டனத்திற்கு உள்ளது. மேலும் சமீபத்தில் கூட இயக்குனர் கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் கொந்தளித்து பேசினார்.
அதற்கு மாறன் ட்விட்டரில் பதிலளித்தார்.இந்நிலையில் தற்போது எந்த ஒரு பிரபலம் தன்னை பற்றி பேசினாலும் அதற்கு பதிலளித்து பிரச்சனைகளை பெரிதாக்கி வருகின்றார் மாறன். சமீபத்தில் இந்திய சினிமாவே பாராட்டும் படமாக அமைந்த பொன்னியின் செல்வன் படத்தை விமர்சனம் செய்தார் மாறன்.
ஆரம்பத்தில் படம் நன்றாக இருப்பது போல் பேசிவிட்டு போக போக அவரது வேலையை காட்டிவிட்டார் மாறன். இவரின் விமர்சனம் ஒட்டுமொத்த திரையுலகையும், ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இயக்குனர் பேரரசு ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்தார்.அவர் கூறுகையில், படங்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு.

அவரை anti indian படத்தின் 2, 3 பாகங்களை எடுக்க சொல்லுங்க. ஒரு படத்தை எடுத்து வெற்றி பெற முடியவில்லை.இவர் மற்ற படங்களை விமர்சனம் செய்கின்றார் என மாறனை கடுமையாக திட்டி பேசினார் இயக்குனர் பேரரசு