விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வம்சி பைடிபல்லி, ‘வாரிசு’ படம் பக்கா தமிழ்ப்படம் என தெரிவித்துள்ளார்.மேலும், மெர்சல் படம் ஒரு மாதிரியான அனுபவத்தை கொடுத்த நிலையில், வாரிசு படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தும் படத்தில் இருக்கும் என்றும் வம்சி குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் அப்போது இத்தகவலை அடுத்து ரசிகர்கள் வாரிசு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது