தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி ரசிகர்களை ஈர்த்தவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனரான வெற்றிமாறன் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை என மெகாஹிட் படங்களை கொடுத்தார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகின்றார் வெற்றிமாறன்.
இதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார். இந்நிலையில் ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிக்கிறார்கள் என இயக்குனர் வெற்றிமாறன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றி மாறன், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது மற்றும் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிப்பது போன்ற விஷயங்கள் நடைபபெற்று வருவதாக பேசியிருந்தார்.

வெற்றிமாறனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தஞ்சை பெரிய கோயிலை சிவனுக்காக கட்டிய ராஜ ராஜ சோழன் இந்து அரசன் இல்லையா? என கேட்டு வெற்றிமாறனை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.