தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.விருமான் ,பொன்னியின் செல்வன் ,சர்தார் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் கார்த்தி.இதையடுத்து தற்போது ராஜு முருகனின் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இவர் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. கார்த்தியின் வித்தியாசமான கெட்டப்பில் அட்டகாசமாக வெளியான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் இயக்குனர் விஜய் மில்டன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் ஜப்பானில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.