திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தில் கண்ணன்மேடு தலக்காடு பகுதிகளில் கடந்த மாதம் நீர் நிலை புறம்போக்குகளில் வசிப்பதாக சுமார் 70 குடும்பங்களை அப்பகுதியில் இருந்து நீதிமன்றம் உத்தர போது எந்த விதமான முன்னறிவிப்பும் வழங்காமல் மாற்று இடம் வழங்காமல் நீர்நிலை புறம்போக்குகளில் அகற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததின் அடிப்படையில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்குப்பதிவு திரும்ப பெற வேண்டும் அதனைத் தொடர்ந்து. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாகை திருவாரூர் மாவட்ட பகுதிகளில் தென்னக ரயில்வே முக்கிய ரயில் சேவைகளை முடக்கப்பட்டுள்ளது மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதனை கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன் திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாவட்ட செயற்குழு கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது