தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டில் கால்வாய் பணி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பணிகள் தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக மாமன்ற உறுப்பினர் யாக்கூப் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் 50-வது வார்டுக்கு உட்பட்ட ஜிவா தெருவில் நடைபெற்று வந்த கால்வாய் பணிகளையும், ரங்கநாதபுரம் 6வது தெருவில் நடைபெற்ற வந்த கால்வாய் பணிகளையும் இன்று மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு மேயர் வசந்தகுமாரி அறிவுறுத்தினார்.
சீமந்தம் முடிந்து 9வது மாதத்திலும் மக்கள் பணியில் ஈடுபட்ட மேயர் வசந்தகுமாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.