Skygain News

குடும்ப வளர்ச்சிக்காக அரசு நிறுவனத்தை பலிகொடுக்க முயற்சிக்கிறது திமுக – அண்ணாமலை காட்டம்

சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில் இரு நாட்களாக தடை ஏற்படுத்தி சுமங்கலி கேபிள் விஷன் போன்ற தனது குடும்ப நிறுவன வளர்ச்சிக்காக, அரசு நிறுவனத்தை திமுக அரசு பலிகொடுக்க முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார் .

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் எந்த ஒரு தொலைக்காட்சியையும் பார்க்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் உடனடியாக தொழில்நுட்பக் கோளாறை சரி செய்து அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான, எளிய பொது மக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரு நாட்களாக தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006 – 2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவு படுத்தியிருக்கும்.

பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும் அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆப்பரேட்டர்களை அடியாட்களைக் கொண்டு மிரட்டியும் இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டே விரட்டி, கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக மாற்றிய திமுகவின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு திமுக அரசு உதவுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த ஒட்டுமொத்த கேபிள் இணைப்புகளில் 80 சதவீதம் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடம் சென்றது 2001-2006 காலகட்டத்தில் மீண்டும் ஹாத்வே 60 சதவீத இணைப்புகள் பெற்று முன்னுக்கு வந்தது. 2006-2008 காலகட்டத்தில் கோபாலபுர குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் சுமங்கலி கேபிள் நிறுவனம் முடங்கிக் கிடந்தது. 2006க்கு பிறகு மீண்டும் தலைதூக்கிய சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு திமுக அரசு உதவியதால் ஹாத்வே நிறுவனம் 2010ல் தமிழகத்தில் இனியும் தொழில் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஓட்டுமொத்த வணிக செயல்பாடுகளை நிறுத்திவிட்டது.

கேபிள் விஷன் போன்ற, தங்கள் குடும்ப தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களைப் பலிகொடுத்த திமுக இப்போது அரசு நிறுவனத்தை பலிகொடுக்க நினைக்கிறது. திறனற்ற திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More