தயவுசெய்து அப்டேட், அப்டேட் எனக் கேட்டு தொல்லை செய்ய வேண்டாம் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களிடம் கடிந்து கொண்டுள்ளார். நந்தமுரி கல்யாண்ராம் நடித்துள்ள அமிகோஸ் படத்தின் விழாவில் பங்கேற்ற ஜூனியர் என்டிஆரிடம், RRR படத்திற்கு பிறகு அவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் அப்டேட், அப்டேட் என கூச்சலிட்டனர். இதனால் டென்ஷனான ஜூனியர் என்டிஆர், ரசிகர்களிடம் கடிந்துகொண்டார். ரசிகர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பதால், தயாரிப்பாளருக்கும், இயக்குநர்களுக்கும் ஏதாவது அப்டேட்டை கொடுத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
