“டாடா” படத்தைப் பற்றி இயக்குனர் பேரரசு பேசுகையில், இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைக்கிற மாதிரி ஒரு படமாக ‘டாடா’ திரைப்படம் அமைந்திருக்கிறது. இப்படத்தில் சில குறைகள் இருக்கலாம்,விமர்சனத்திற்கு உள்ளான காட்சிகள் இருக்கலாம் அதை பெரிதுபடுத்தி இந்த படத்தை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டாம். இப்படி எப்பொழுதோ வரும் படத்திற்கு நாம் விமர்சனங்கள் என்ற பெயரால் எதிர்ப்புகளை வலுக்கச் செய்தால் மீண்டும் வெறும் வியாபார படங்களுக்குள் திரையுலகம் முடங்கிவிடும். இந்த டாடா படத்தை திரையுலகின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வரவேற்போம் என கூறினார்.
