Skygain News

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை…!

           இந்திய அரசியல் வரலாற்றில் திரௌபதி முர்மு ஒரு முக்கியமான பெண் அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் ஜூன் 20, 1958ஆம் ஆண்டு ஒடிசாவில், மயூர்பஞ் மாவட்டத்தில் உள்ள உப்பர்பேட கிராமத்தில், சந்தாலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோரும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் கிராமத்து தலைவராக இருந்தனர்.


           திரௌபதி முர்மு, ஷியாம் சரண் முர்மு என்ற வங்கியாளரை திருமணம் செய்தார். அவர் 2014ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

ஆசிரியர் தொழில்:

           முர்மு, அரசியலில் நுழைவதற்கு முன்பே ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். ரைரங்ப்பூரில் உள்ள ஸ்ரீ அரபிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவி பேராசிரியாகவும், ஒடிசா அரசின் நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணிபுரிந்தார். 

அரசியல் வாழ்க்கை:

           முர்மு, 1997ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதுமட்டுமில்லாமல்  ரைரங்ப்பூர் நகர் பஞ்சாயத்து கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முர்மு 2000ஆம் ஆண்டில் ரைரங்ப்பூர் நகர் பஞ்சாயத்தில் தலைவரானார். பிஜேபி பட்டியல் பழங்குடியினர் மோர்ச்சாவில் தேசிய துணை தலைவராகவும் பணியாற்றினார்.


           2000 முதல் 2004ஆம் ஆண்டு வரை ரைரங்ப்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சராகவும் இருந்தார். 2007ஆம் ஆண்டின் ஒடிசா சட்டமன்ற தொகுதியில் சிறந்த எம் எல்  ஏ காண நிகந்தா விருது முர்முவுக்கு வழங்கப்பட்டது.

ஜார்கன்ட் ஆளுநர்:

          முர்மு மே 18, 2015 இல் ஜார்கன்ட் ஆளுநராக பதவியேற்றார். முர்மு ஜார்கன்டில் முதல் பெண்  ஆளுநர் ஆவார். முர்முதான் ஒடிசாவில் முதல் பெண் பழங்குடியின தலைவராக இந்திய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2022 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம்:

           ஜூன் 2022இல், முர்முவை தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக 2022 தேர்தலில் இந்திய ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. 


           பி.எ. சங்க்மாவிற்கு பிறகு முர்முதான் இரண்டாவது நபராக இந்திய குடியரசு தலைவர் பதவிற்கு பழங்குடியினர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 


           இதையடுத்து  குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.



           முப்படைகள் புடைசூழ திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் குடியரசு துணை தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம்.பிர்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள், மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா். 

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More