இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது T20 போட்டியில் தேபாரிகா வெற்றிபெற்றாலும் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இருப்பினும் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் power play வில் களமிறங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இது ஏன் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார். அவர் பேசியது ,‘தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு சரியான பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. 6ஆவது இடத்தில் களமிறங்கினால் 5-10 பந்துகள்தான் விளையாட கிடைக்கும்’’
‘‘இதனால், எப்போதுமே அழுத்தங்களுடன் விளையாட வேண்டிய நிலைதான் இருக்கும்.
அந்த நிலையை மாற்றத்தான் இன்று துவக்கத்திலேயே இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தோம். இதன்மூலம், அவர்களுக்கு களத்தில் அதிக நேரம் இருக்க நேரம் கிடைக்கும், மன உறுதியும் நன்றாக இருக்கும் என நினைத்தோம்.

தினேஷ் கார்த்திக் வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்’’ எனக் கூறினார்.இந்நிலையில் இந்திய இன்று T20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்வது குறிப்பிடத்தக்கது