நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் இந்தியா தோற்றாலும் தொடரை கைப்பற்றியுள்ளது. இப்போட்டி முடிந்தளவுடன் இந்திய தலைமை பெரிச்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, டி20 உலககோப்பை போன்ற தொடரில் விளையாடும் போது உங்களுக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் தேவை என்று கூறினார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் போது எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.

ஆனால், ஆஸ்திரேலியா தொடரின் போது எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. டி20 போட்டியில் வெற்றி வாய்ப்பு எப்போதும் இரு அணிக்கும் இருக்கும். இதனால் லக் தான், அதனை முடிவு செய்யும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என இரு அணிகளுடன் சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என பேசினார் ராகுல் டிராவிட்