காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கோவூர் பகுதியில் அசாருதீன் என்பர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் . தன்னை இரண்டு பேர் வழிமறித்து தங்களிடம் டைடால் மாத்திரைகள் இருப்பதாகவும், அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்தி கொண்டால் போதையாக இருக்கும் என கூறி ரூபாய் 500 க்கு வலுக்கட்டாயமாக விற்பனை செய்ய முயன்றதாக அந்த புகாரில் கூறியுள்ளார் .

அந்த புகாரை பெற்றுக் கொண்ட மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் ராஜீ தலைமையிலான காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் பெரிய கொழுத்துவாஞ்சேரியை சேர்ந்த தியாகராஜன் கெருகம்பாக்கத்தை சேர்ந்த சரத்குமார் ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்,
விசாரணையில் இருவரும் ஆன்லைனில் போலியான முகவரி கொடுத்து போதைப்பொருட்களை வாங்கி, அதை கூகுள் பே மூலம் விற்று வந்ததும் உறுதியானது, மேலும் இவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் 500 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..