புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்ட்டுள்ளது . கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை தாறுமாறாக வெளுத்து வாங்கி வருகிறது. புதுவையிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நாளையும் புதுவை, காரைக்காலில் அதிகனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.