கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று (11-11-2022) மற்றும் நாளை (12-11-2022) இரண்டு நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.